மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த ராகுல்: மோடி தனி ஆலோசனை!

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த ராகுல்:  மோடி தனி ஆலோசனை!

பெகாசஸ் முதல் பெட்ரோல் டீசல் விலை வரை பல்வேறு விவகாரங்கள் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அதற்கு ஒரு நாள் முன்னதாக ஜூலை 18ஆம் தேதி பெகாசஸ் புயல் வீசத் தொடங்கியது.

உச்ச நீதிமன்ற நீதிபதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் சிபிஐ இயக்குநர் என 300 பேரின் செல்போன்கள் உளவு பார்ப்பதற்காக ஒட்டுக்கேட்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுப்பதுடன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அனுமதிக்கவில்லை. இதுதவிர விவசாயிகள் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. மக்களவை, மாநிலங்களை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) காலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காலை உணவு கூட்டத்துக்கு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். போட்டி நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான திட்டம் குறித்தும் பேசப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ராகுல் அழைப்பின் பேரில் டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூசன் கிளப்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாடி கட்சி, சிபிஐ (எம்), ஐயூஎம்எல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாடு, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி), கேரள காங்கிரஸ் (எம்) மற்றும் லோக்தந்திரிக் ஜனதா தளம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்துகொண்டன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஒற்றுமையின் அஸ்திவாரங்களுக்குள், நாம் சில விவாதங்கள் மற்றும் வாதங்களை நடத்தலாம். ஆனால் நமது ஒற்றுமையின் அடிப்படைகளின் கொள்கைகளை நாம் கொண்டு வருவது முக்கியம். இந்த (எதிர்க்கட்சிகளுடைய) குரல் எவ்வளவு ஒன்றிணைகிறதோ, அந்தளவிற்குச் சக்தி வாய்ந்ததாக மாறும். இந்தக் குரலை அடக்குவது பாஜக - ஆர்.எஸ்.எஸ்க்கு கடினமாகும்” என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, அவர் பொட்ரோல் டீசல் விலை உயர்வு, பெகாசஸ் விவகாரம் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சைக்கிளில் பேரணியாக நாடாளுமன்றத்துக்குச் சென்றார். அவருடன் எதிர்க்கட்சியினரும் நாடாளுமன்றத்திற்குச் சைக்கிளில் வந்தனர். அப்போது ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினர்.

ஏற்கனவே ராகுல் காந்தி வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்த நிலையில், இன்று சைக்கிளில் வந்துள்ளார்.

ராகுல் காந்தி தலைமையில் இவ்வாறு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்துகொண்டிருக்க மறுபக்கம், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடையூறு செய்வது நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும், நாட்டு மக்களையும் அவமதிப்பதாகும் என்று பிரதமர் மோடி கூறியதாக, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலத் ஜோஷி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அமைச்சரின் அறிக்கையை, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கிழித்து எறிந்ததற்குப் பிரதமர் கோபத்தை வெளிப்படுத்தினார் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் கண்ணியம் காக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் என பிரஹலத் ஜோஷி கூறினார்.

பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

செவ்வாய் 3 ஆக 2021