மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

பேனர் வைத்தால் கட்சியில் இருந்து நீக்கம்: ஸ்டாலின் வருமுன் வந்த எச்சரிக்கை!

பேனர் வைத்தால் கட்சியில் இருந்து நீக்கம்: ஸ்டாலின் வருமுன் வந்த எச்சரிக்கை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆகஸ்டு 4) தர்மபுரி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணமாக வருகிறார்.

தர்மபுரி மாவட்ட மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சைக்கான கூடுதல் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்,ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்காக அவர் தர்மபுரி வருகிறார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு ஆகஸ்டு 1 ஆம் தேதி தர்மபுரி மாவட்டப் பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்டச் செயற்குழு கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை சிறப்பான முறையில் வரவேற்பது குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

இதேபோல அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் அமமுக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பன் முதல்வர் தர்மபுரி வருவதைப் பயன்படுத்தி தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை முதல்வர் முன்னிலையில் கட்சியில் சேர்க்கலாம் என்று திட்டமிட்டு அதற்காக முதல்வரிடம் ஒப்புதல் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் அறிவாலயத்தில் இருந்து தர்மபுரி மாவட்ட திமுக நிர்வாகத்துக்கும்,பழனியப்பனுக்கும், “முதல்வர் அரசு விழாவுக்காக வருகிறார். அரசியல் விழா அல்ல. எனவே படாடோபமான வரவேற்புகளைத் தவிர்க்க வேண்டும். சாலைகளை சூழ்ந்து நிற்கக் கூடாது. சாலையோரத்தில் இருந்து சில அடிகள் உள்ளேதான் நின்று வரவேற்க வேண்டும். முக்கியமான கட் அவுட்டுகள் பேனர்கள் வைக்கவே கூடாது. அப்படி வைத்திருந்தால் யார் பெயரில் வைக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்” என்று எச்சரிக்கையோடு தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால் பழனியப்பன் முதல்வர் ஸ்டாலினை வரவேற்பதற்காக 5 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட எல்லையில் இருந்து வைக்க திட்டமிட்டிருந்த பேனர்களை எல்லாம் அப்படியே உள்ளேயே வைத்துவிட்டாராம்.

அண்மையில்தான் கட்சியின் முக்கியப் பிரமுகர்களை வரவேற்கவோ, கட்சி நிகழ்ச்சிகளுக்கோ சாலைகளில் பேனர்கள் வைக்கக் கூடாது என்று கட்சித் தலைமையின் எச்சரிக்கையை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கையாக வெளியிட்டிருந்தார். அதை நினைவுபடுத்திதான் தர்மபுரி மாவட்ட திமுக நிர்வாகத்துக்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

-வணங்காமுடிவேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

செவ்வாய் 3 ஆக 2021