மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

பெகாசஸ்: கூட்டணிக்குள்ளேயே பாஜக அரசுக்கு எதிரான குரல்!

பெகாசஸ்: கூட்டணிக்குள்ளேயே பாஜக அரசுக்கு எதிரான குரல்!

நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து உலுக்கி வரும் பெகாசஸ் உளவு விவகாரத்தில் இதுவரை எதிர்க்கட்சிகள் மட்டுமே போராடி வந்த நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சியும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் நேற்று (ஆகஸ்டு 2) முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் என்பது ஒரு விவகாரமே அல்ல என்று ஒன்றிய அரசு நாடாளுமன்ற விவாதத்தை நிராகரித்த நிலையில், “ பெகாசஸ் கண்காணிப்பு சர்ச்சை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்”என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிதீஷ்குமார் ஆதரித்துள்ளார்.

"இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். மக்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள். தொலைபேசி ஒட்டுக் கேட்டலால் மக்கள் தொந்தரவு செய்யப்படலாம். எனவே இந்த விவகாரத்தில் விவாதம் மட்டுமல்ல விசாரணையும் வேண்டும்” என்று பாட்னாவில் நேற்று மக்கள் சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் நிதீஷ்குமார் கூறினார்.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பில் பிரசாந்த் கிஷோர் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். எனவே பிரசாந்த் கிஷோர் கண்காணிக்கப்பட்டிருந்தால் நிதீஷ்குமாரும் கண்காணிக்கப்பட்டிருப்பாரோ என்ற கேள்வி பிகார் அரசியல் களத்தில் எழுந்தது. இந்த நிலையில்தான் பெகாசஸ் விவகாரத்தில் விவாதம்,விசாரணை வேண்டும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவரே கூறியிருப்பது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் தெம்பாகியிருக்கிறது.

-வேந்தன்

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

செவ்வாய் 3 ஆக 2021