மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

நாளை கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்!

நாளை கூடுகிறது அமைச்சரவைக்  கூட்டம்!

பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர், அமைச்சர்கள் பொறுப்பேற்ற மே 7ஆம் தேதியே நடைபெற்றது. அப்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது, கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, அமைச்சரவைக் கூட்டம் கூடி விவாதிப்பது வழக்கம்.

தமிழகத்தில் மக்கள்நலத் திட்டங்களுக்காக துறை வாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், அதற்கு ஆகும் செலவுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். அதன்படி, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். நாளை (ஆகஸ்ட் 4) காலை 10 மணியளவில் தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வேளாண் நிதி நிலை அறிக்கை ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்றும், தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கைக்குக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

செவ்வாய் 3 ஆக 2021