மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

ரங்கசாமியைச் சந்திக்காத மோடி: தொடரும் புதுச்சேரி புகைச்சல்!

ரங்கசாமியைச் சந்திக்காத மோடி: தொடரும் புதுச்சேரி புகைச்சல்!

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உருவாகியதில் இருந்தே பிரச்சினைகளைத்தான் சந்தித்து வருகிறது புதுச்சேரி. தேர்தலில் வெற்றிபெற்று மாதக்கணக்காகியும் அமைச்சர்களை நியமிக்க முடியாமல், பிறகுதான் அமைச்சர் பதவி விவகாரத்தில் இரு கட்சியினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் பாஜகவின் கடுமையான எதிர்க்கட்சியான திமுக சார்பில் தமிழ்நாட்டில் வென்ற முதல்வர் ஸ்டாலினையும் பிரதமர் சந்தித்துவிட்டர். ஆனால் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்று முதல்வரான புதுவை முதல்வர் என்.ரங்கசாமியை பிரதமர் மோடி இன்னும் சந்திக்கவில்லை. இன்னும் கொடுமை என்னவெனில் புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ.க்களை எல்லாம் சந்தித்துப் பேசி போட்டோ எடுத்துக்கொள்ளும் பிரதமர், புதுச்சேரி முதல்வரைச் சந்திக்க நேரம் கொடுக்கவில்லை.

அமைச்சரவையில் பாஜகவுக்கு இரண்டு அமைச்சர் பதவி மட்டும் கொடுத்தார் ரங்கசாமி. முதல்வர் பதவி உட்பட நான்கு அமைச்சர்களைத் தன்வசம் வைத்துக்கொண்டார் ரங்கசாமி. ஆனாலும் உள்துறையைக் கேட்டுப் பெற்றது பாஜக. ஆனாலும் முதல்வர் ரங்கசாமி மீது பாஜக தலைமை கடுமையான கோபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

“என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களாக இருப்பவர்களுக்கும் நம்பிக்கையாக இருப்பவர்களுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. மாறாகத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸுக்கு வந்த லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா மூவருக்கும் அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். கூடவே இருந்த திருமுருகன் மற்றும் ராஜவேல் போன்றவருக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை. மேலும் என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் முதல்வரைச் சந்திக்கச் சென்றால் சரியாக ரெஸ்பான்ஸ் கொடுக்காமல் ஒதுங்கிப்போவதால், பாஜக அமைச்சர் நமச்சிவாயத்தை நோக்கிச் செல்கிறார்கள்.

கட்சிக்குள்தான் பிரச்சினை என்றால் நிர்வாகத்திலும் ரங்கசாமிக்கு நெருக்கடிகள்தான். முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து தலைமைச் செயலாளர் அஷ்வின் குமாரை மாற்றச் சொல்லிக் கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பிவருகிறார் முதல்வர். ஆனால், ஆளுநர் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. அதுபோல் சில கோப்புகள் ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று இதுவரை கிளியராகவில்லை என்கிறார்கள் புதுச்சேரி தலைமைச் செயலக வட்டாரத்தில்.

முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் ஆகஸ்ட் 4ஆம் தேதி, என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கிராமங்கள் முதல் நகரப்பகுதிகள் வரையில் விளம்பரப் பலகைகள் வைத்துள்ளார்கள். புதுச்சேரியில் கட் அவுட் வைக்கக் கூடாது என்ற தடை உத்தரவு இருந்தும் இப்படி தனது பிறந்தநாளுக்கு கட் அவுட் வைக்க அனுமதி கொடுத்து அதை முதல்வர் ரசித்து வருவதாக காவல் துறையினரே புலம்புகிறார்கள்.

கடந்த ஆட்சியில் முதல்வராக நாராயணசாமியும் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இருந்தபோது நகர்ப்பகுதியில் ஒரு கட் அவுட் கூட வைக்காமல் பார்த்துக்கொண்டார்கள் என்பதையும் போலீஸார் நினைவுபடுத்துகிறார்கள்.

-வணங்காமுடி

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

செவ்வாய் 3 ஆக 2021