மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

கலைஞர் படத் திறப்பு: குடும்ப உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் சொன்ன பதில்!

கலைஞர் படத் திறப்பு: குடும்ப உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் சொன்ன பதில்!

திமுகவின் நீண்ட காலத் தலைவராக இருந்தவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கலைஞரின் உருவப் படத்தை தமிழக சட்டமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்டு 2) மாலை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சமூக இடைவெளியோடு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாலும், சட்டமன்றத்தில் போதிய அளவு இடம் இல்லாமையாலும் இவ்விழாவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் கணிசமாகவே இருந்தது.

இந்நிலையில் இவ்விழாவில் பங்கேற்பதற்காக கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் ஆர்வமாக இருந்தனர். விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் வைத்த வேண்டுகோள் முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. குடும்ப உறுப்பினர்களின் என்ணிக்கையே 25க்கு மேல் இருந்ததால், அந்தப் பட்டியலைப் பார்த்து யோசித்த ஸ்டாலின், ‘இட நெருக்கடி இருப்பதால் டிவியில் பார்த்துக் கொள்ளவும்’என்று அந்த பட்டியலில் எழுதி திருப்பி அனுப்பிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

குடும்ப உறுப்பினர்களை அனுமதித்திருந்தால் அதை வைத்தே திமுகவுக்கு எதிரான விமர்சனங்கள் உருவாகக் கூடும் என்று கருதியும், இடப் பற்றாக்குறையுமே இந்த நிராகரிப்புக்குக் காரணம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

-வேந்தன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

திங்கள் 2 ஆக 2021