மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த, மனு குறித்து வரும் 4ஆம் தேதி விளக்கம் அளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நலனுக்காக வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலை கழகத்தைப் பிரித்து விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரியும் பதிவாளரை நியமிக்கக் கோரியும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தர் நியமிக்கப்பட்டு கட்டுமானத்திற்காக விழுப்புரம் அருகே செம்மேடு கிராமத்தில் 70 ஏக்கர் நிலம் அதிமுக அரசால் ஒதுக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுவதாகவும் பல்கலைக் கழகத்துக்கு பதிவாளரும் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படாததால், பல்கலைக்கழகப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்ற அறிவிப்பு வெளியிட்டது சட்டத்தை மீறிய செயல். இந்த அறிவிப்புக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆகஸ்ட் 2) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஜெயலலிதா பல்கலைக்கழக வரம்புக்குள் வரும் பகுதிகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் படிப்புகளை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கிய பின்னர் துணைவேந்தர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். கட்டிடங்கள் எதுவும் கட்டப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் மாணவர்களின் நலன் கருதி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இவ்வழக்கு தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-பிரியா

அதிமுகவில் சசிகலா: எடப்பாடிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!

9 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா:  எடப்பாடிக்கு  அதிகரிக்கும் அழுத்தம்!

கொடநாடு: சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி ...

7 நிமிட வாசிப்பு

கொடநாடு:  சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி வழக்கு?

கனகராஜ் மரணம்: சகோதரர் உட்பட 2 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

கனகராஜ் மரணம்:  சகோதரர் உட்பட 2 பேர் கைது!

திங்கள் 2 ஆக 2021