மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு!

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு!

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து நேற்று இரவு முதன் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை வந்தார். நேற்று இரவு கோவை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் ஆட்சியர் சமீரனை சந்தித்து வரும் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டுமென மனு கொடுத்தார் கமல். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக நிதிநிலை அறிக்கையில் கிராமசபைகளுக்கு என தனி நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனிடையே கமலை வரவேற்க அக்கட்சி நிர்வாகிகள் அதிகளவு கூடியதால் அவர்கள் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பு விதிகளை மீறுதல், அனுமதியின்றி ஓரிடத்தில் ஒன்று கூடுதல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாநில துணை தலைவர் தங்கவேலு, மாநில நிர்வாகிகள் அனுஷ ரவி, மயில்சாமி, ரங்கநாதன், ரத்தினம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக திமுக அரசை எதிர்த்து போராடிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

திங்கள் 2 ஆக 2021