மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

கலைஞர்- ஜெயலலிதா: இறந்தும் தொடரும் அரசியல் மோதல்!

கலைஞர்- ஜெயலலிதா: இறந்தும் தொடரும் அரசியல் மோதல்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவப் படத்தை இன்று (ஆகஸ்டு 2) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இதற்காக இன்று பகல் அவர் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்த விழாவுக்காக தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களூக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இந்த வகையில் சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த விழாவில் அதிமுக சார்பில் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று தெரிவித்திருக்கிறார். கடந்த ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவப் படம் திறந்து வைக்கப்பட்டது. 2018 பிப்ரவரி 12 ஆம் தேதி சட்டமன்றத்தில் அன்றைய சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

அப்போது, “நீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது” என்று திமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு படி மேலே போய், “சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டு விட்டது. இனி அங்கு புனிதம் இல்லை. குறைந்தபட்சம் அங்கு ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ள காந்தி, பெரியார், அண்ணா உள்ளிட்ட 10 பேரின் படங்களை அகற்றி விடலாமே. அவர்களின் புனிதமாவது காக்கப்படும் அல்லவா?”என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியை திமுக புறக்கணித்தது போல, கலைஞர் படத் திறப்பு நிகழ்ச்சியை அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சட்டமன்றத்தில் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது. சட்டமன்ற வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுகிறது. சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை திமுகவினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நாங்கள் எப்படி வரமுடியும்?” என்று கேட்டிருக்கிறார்.

இதன் மூலம் ஜெயலலிதா-கருணாநிதி இடையிலான அரசியல் மோதல் அவர்கள் இறப்புக்குப் பின்னரும் தொடர்கிறது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 2 ஆக 2021