மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

கிராம சபை: கோவை ஆட்சியரிடம் கமல் மனு!

கிராம சபை:  கோவை ஆட்சியரிடம் கமல் மனு!

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி, கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஆகஸ்ட் 2) மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மனு கொடுத்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம், ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. தேர்தல் முடிவை அடுத்து பலரும் மநீமவிலிருந்து வெளியேறினர். கட்சி நிர்வாகிகள் வெளியேறி வந்தாலும், அமைதியாக இருந்த கமல் தற்போது மீண்டும் கட்சிப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார். இரண்டு நாள் பயணமாகக் கமல் கோவைக்குச் சென்றுள்ளார்.

கட்சியைக் கட்டமைப்பது குறித்து அவர் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ள அவர், இன்றும், நாளையும் கட்சியினர் உள்ளிட்டோரைச் சந்திப்பதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில், இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனைச் சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கிராம சபைக் கூட்டங்களை நடத்தக் கோரி மனு அளித்துள்ளோம். கடந்த 2020 ஜனவரிக்குப் பிறகு கிராம சபைக் கூட்டம் நடக்கவே இல்லை என்பதுதான் எங்கள் குறை. இதனை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்துள்ளோம்.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். தமிழக நிதிநிலை அறிக்கையில் கிராம சபைகளுக்கு எனத் தனி நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

திங்கள் 2 ஆக 2021