மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

தமிழகத்தில் குடியரசுத் தலைவர்: சட்டமன்றத்தில் கலைஞர்

தமிழகத்தில் குடியரசுத் தலைவர்: சட்டமன்றத்தில் கலைஞர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று (ஆகஸ்ட் 2) தமிழகம் வருகிறார்.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 2) நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றவுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார்.

இன்று மாலை சென்னை கோட்டையில் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெறும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார் குடியரசுத் தலைவர். இதற்காக வரவேற்பு ஏற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. விழாவை ஒட்டி தலைமைச் செயலகம் கடந்த சில நாட்களாகவே வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

சட்டமன்ற நூற்றாண்டு விழாவிலும், கலைஞர் உருவப்பட திறப்பு விழாவிலும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று மாலை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திருவுருவப் படத்தை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர். அதன் பின்னர் இன்று இரவு, சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கிவிட்டு நாளை (ஆகஸ்ட் 3) காலை தனி விமானம் மூலம் நீலகிரி புறப்பட்டு செல்கிறார்.

சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலக வளாகம், சட்டமன்ற மண்டபம் ஆகிய இடங்களில், காவல் ஆணையாளர் தலைமையில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், போக்குவரத்து காவல், கமாண்டோ படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட 5,000 காவல் துறையினருடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

குடியரசுத் தலைவர் சென்னையில் செல்லும் வழித்தடங்களில், போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு, அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஆகஸ்ட் 2 முதல் 6 வரை தமிழ்நாட்டில் தங்கவிருக்கும் குடியரசுத் தலைவர், ஆகஸ்ட் 4 அன்று வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியைப் பார்வையிட்டு, 77ஆவது பணியாளர் பயிற்சியைச் சேர்ந்த மாணவ அலுவலர்களிடையே உரையாற்ற உள்ளார்.

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

திங்கள் 2 ஆக 2021