மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

கோயில்களில் தமிழில் அர்ச்சனை: அமைச்சர் சேகர்பாபு

கோயில்களில் தமிழில் அர்ச்சனை: அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வேயில் நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும். இதற்காக 47 கோயில்களைத் தேர்வு செய்து ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என விளம்பரப் பலகைகள் வைக்கப்படும். முதற்கட்டமாக புதன் அல்லது வியாழக்கிழமை அன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படும்.

அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் தகவல் பலகையில் வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் அந்த அர்ச்சகரைத் தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.

முதலில் பெரிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறை தொடங்கப்பட்டு, பின்பு சிறிய கோயில்களுக்கும் அம்முறை விரிவுப்படுத்தப்படும். அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடிய அர்ச்சகர்களை முறையாகப் பயன்படுத்தி அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் பெரிய கோயில்களில் ஆடிப் பெருக்கு விழாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதங்களில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள கோயில்களுக்கு மக்கள் வருவது வழக்கம். அதன்மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில்களில் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குப் பிறகு கோயில்களைத் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்று கூறினார்.

முன்னதாக, சென்னை மாநகராட்சி சார்பில் திரு.வி.க.நகர் மண்டல அலுவலக வளாகத்தில் ஒரு வார கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தின் தொடக்க விழாவை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

-வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

திங்கள் 2 ஆக 2021