மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

பென்னிகுயிக் நினைவில்லத்தை இடித்து கலைஞர் நூலகமா?

பென்னிகுயிக் நினைவில்லத்தை இடித்து கலைஞர் நூலகமா?

மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக் நினைவு இல்லம் என்றும், எனவே அதை இடிக்கக் கூடாது என்றும் அதிமுக, பாமக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஆகஸ்டு 1) வெளியிட்ட கூட்டறிக்கையில்,

“தென் தமிழ்நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய பென்னி குயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற திமுக அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி வகுத்த கர்னல் ஜான் பென்னி குயிக்கின் நினைவு இல்லம் தமிழ்நாடு அரசால் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நூற்றாண்டுக்கும் மேற்பட்ட அந்த நினைவில்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் இதை உறுதிப்படுத்தும் வண்ணம்,’மதுரையில் முன்னாள் முதல்வரின் பெயரிலான நூலகம் உருவாக தேர்வான பொதுப்பணித்துறை கட்டிடத்தில் ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை’ என்று மதுரை ஆட்சித் தலைவர் அறிவித்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஒரு வரலாற்றை அழித்துவிட்டு இன்னொரு வரலாற்றை உருவாக்குவது கண்டிக்கத் தக்கது. பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு அங்கு கலைஞரின் பெயரில் நூலகம் அமைப்பது என்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம். அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இப்பிரச்சினை குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பதற்காக, மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் வாழ்ந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வீட்டை இடிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

கலைஞர் பெயரில் அறிவை வளர்க்கும் கருவியான நூலகத்தை அமைப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை இடிப்பது முறையல்ல. பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் வசிப்பிடமாக உள்ள அந்த இல்லத்தை பென்னிகுவிக் நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்.

மதுரை பாண்டி கோயில் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அதிகமாக உள்ளன. அங்கு இப்போது திட்டமிடப்பட்டதை விட இன்னும் பிரம்மாண்டமாக நூலகம் அமைக்கலாம். அதற்காக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்”என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ராமதாஸ்.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

ஞாயிறு 1 ஆக 2021