மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

தயார் நிலையில் திமுக : விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!

தயார் நிலையில் திமுக : விரைவில் ஊரக  உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15 க்குள் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்கள் விரைவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 27 ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனையும் நடைபெற்ற நிலையில், ஜூலை 28 ஆம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வாக்குச் சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் தயாரித்தலுக்கான அறிவுரைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டது.

இந்நிலையில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களின் கலெக்டர் அலுவலகங்களில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பட்டியல் நேற்று (ஜூலை 31) சென்னையில் இருக்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய சேர்மன் தேர்தல், மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதற்கு தனித்தனி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த 9 மாவட்ட கலெக்டர்களுக்கும் தேர்தல் அதிகாரிகள் பட்டியலை நேற்று மாலைக்குள் தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்பும்படி ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவுக்குள் தேர்தல் அதிகாரிகள் பட்டியல் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து அனுப்பப்பட்டுவிட்டது.

இதற்கிடையில், சில ஒன்றிய சேர்மன், பஞ்சாயத்து சேர்மன் பதவிகள் கடந்த ஆட்சியில் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவை பொதுப் பட்டியலில் இருந்தால் திமுகவுக்கு சாதகமாக இருக்குமென்பதால் பெண்கள் ஒதுக்கீடு என மாற்றப்பட்டன. அவற்றை மீண்டும் பொது ஆண்கள் பிரிவுக்குக் கொண்டுவருவது உட்பட முக்கியமான பணிகளை திமுகவினர் முடித்துவிட்டனர். அதையடுத்து தேர்தல் அதிகாரிகள் பட்டியலும் அனுப்பப்பட்டுவிட்டது.

திமுக தரப்பில் கிட்டத்தட்ட வேட்பாளர் தேர்வுகளும் முடிந்துவிட்டன. எல்லாவற்றையும் தயாராக வைத்துக் கொண்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு 20 நாள் அவகாசத்தில் தேர்தலை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாவது அலை ஒருவேளை வருமானால் அதற்குள்ளாக இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேகமாக இருக்கிறது அரசு என்கிறார்கள் ஆளுங்கட்சி வட்டாரத்தில்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 1 ஆக 2021