மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் கட்டாயம்!

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் கட்டாயம்!

கேரளாவிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எந்தவித கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை,கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதியில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை, ஹோட்டல்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது, கடை செயல்படும் நேரம் குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 1) காலை அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் மற்றும் காமராஜர் உள் நாட்டு விமான முனையம் ஆகியவற்றிலிருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை ஆய்வுகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “லண்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனையோடு ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைக்கு ரூ.900 கட்டணம் பெறப்பட்டு 4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது. மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து பேருந்து, ரயில் மற்றும் வாகனங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்படும். அப்படி இல்லையென்றால் கேரளாவில் இருந்து வருபவர்கள் இரு தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காட்டினால் தமிழ்நாட்டிற்குள் வரலாம். விமான நிலையத்தில் 13 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை ஓரிரு தினங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

மூன்றாவது அலை வந்தாலும், அதை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது அவசியம். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவது மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். சென்னை மாநகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 9 குறுகலான இடங்களில் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது, அறநிலையத்துறை நடவடிக்கை மூலம் கோயில்களில் கூட்டம் கூடுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

-வினிதா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

ஞாயிறு 1 ஆக 2021