மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

கோவை : மீண்டும் கடுமையாகும் ஊரடங்கு!

கோவை : மீண்டும் கடுமையாகும் ஊரடங்கு!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் கூடுதலாக எந்த தளர்வுகளும் இன்றி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களைத் தவிர அனைத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு உள்ளது. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா நிலவரம் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம் ஒன்றிய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகும் பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரைக் கடந்த சில தினங்களாகப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களில் முறையே 169, 179, 246 என்ற வகையில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று இரவு, அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆலோசனை நடத்தினார். இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், `ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்திற்குக் கூடுதலாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம், 5,6 மற்றும் 7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலுார் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும், ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள் காலை 8 முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.

கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி. சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இவற்றைக் கண்காணிக்க வேண்டும்.

கேரள - தமிழ்நாடு எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சோதனை சாவடிகள் வழியாக, கோவை மாவட்டத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட 'ஆர்டிபிசிஆர்' பரிசோதனை சான்று மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும்` என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, தேனி பகுதியை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 20ஆயிரத்துக்கும் அதிகமாகப் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கேரளாவிலிருந்து ரயில் மூலமோ அல்லது தனி வாகனங்களிலோ வருபவர்களால் தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாகக் கோவை போன்று மற்ற மாவட்டங்களிலும் ஊரடங்கு கடுமையாக்கப்படலாம். எனவே கேரள ரயில்களைத் தமிழகத்துக்குள் அனுமதிக்க வேண்டாம், அங்கிருந்து வருபவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று கட்டாயம் வைத்திருத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

ஞாயிறு 1 ஆக 2021