மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

எதிர்க்கட்சிகள் மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன: செந்தில் பாலாஜி

எதிர்க்கட்சிகள் மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன: செந்தில் பாலாஜி

திமுக ஆட்சியில் மின் தடை ஏற்படுவது போன்ற மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத் துறை தலைமை பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று (ஜூலை 31) நடைபெற்றது. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்பது மாதங்களாகச் செய்யப்படாமல் இருந்த பராமரிப்புப் பணிகள் திமுக ஆட்சியில் 10 நாட்களுக்குள் முடிக்கப்பட்டது. அதுபோன்று கடந்த ஆட்சியில் மின் அழுத்த பிரச்சினை தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பாதிப்படைந்து குறைந்த மின் அழுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் சரி செய்யப்படும்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதேபோன்று மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்கிற வாக்குறுதியும் விரைவில் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

மூன்றில் ஒரு பங்கு மின்சாரத்தை நாம் கொள்முதல் செய்து வருகிறோம். நமக்கான தேவையை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இதுவரை 14 லட்சத்து 69,000 பேர் மின் கட்டணத்தை மாற்றிச் செலுத்தியுள்ளனர். யாருக்கெல்லாம் கட்டணத்தில் சந்தேகம் இருக்கிறதோ, அவர்கள் மின் வாரிய அதிகாரியிடம் கூறினால், அவர்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காணப்படும். அதிக கட்டண புகாரில் கணக்கீட்டாளர் தவறு செய்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் மின் தடை ஏற்படுவது போன்ற மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன. ஆனால் கடந்த ஆட்சியிலும் மின் தடை இருந்தது. கடந்த ஆட்சியில் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களின் மின்தடைகள் எண்ணிக்கை குறைவு. மக்கள் நம்பிக்கையுடன் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற பிரச்சினைகள் முதல்வர் தளபதி அவர்களின் நல்லாட்சியில் விரைவில் முற்றிலும் தவிர்க்கப்படும். மின் தடை குறைக்கப்பட்டு சீரான மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இலவச மின்சாரம் கோரி நான்கரை லட்சம் விவசாயிகள் காத்திருப்புப் பட்டியலில் இருக்கின்றனர். கடந்த ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது என்று கூறுவோர், ஏன் இந்த நான்கரை லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று தெரியவில்லை” என்று கூறினார்.

-வினிதா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

ஞாயிறு 1 ஆக 2021