மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

டெல்லி திரும்பிப் பார்க்க வேண்டும்: தினகரனின் தஞ்சை அஜெண்டா!

டெல்லி திரும்பிப் பார்க்க வேண்டும்:  தினகரனின் தஞ்சை அஜெண்டா!

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்தும் இதைத் தடுக்க வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்தும் அமமுக ஆகஸ்டு 6 ஆம் தேதி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு சைலன்ட்டாக இருந்துவந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சில நாட்களுக்கு முன்பு சசிகலாவிடம் அரசியல் ரீதியான ஆலோசனை செய்திருக்கிறார். அதன் பிறகு கடந்த 29ஆம் தேதி, அமமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளார்.

அப்போது, “நாம் நடத்தும் ஆர்ப்பாட்டம் மக்கள் பிரச்சினைக்கான ஆர்ப்பாட்டம் மட்டுமல்ல...நமது கட்சியின் பலத்தைக் காட்டும் வகையிலும் இருக்க வேண்டும். டெல்டா மாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை உட்பட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தொண்டர்களை கூட்டலாம். மற்ற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் அதிக அளவில் வரவேண்டும். நிர்வாகிகளுக்கு செலவு வைக்க வேண்டாம், செலவு தொகையை தலைமையே கொடுத்துவிடும்”என்று உற்சாகம் கொடுத்துள்ளார் டிடிவி தினகரன்.

ஜூலை 30ஆம் தேதி அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ராமசாமி மற்றும் பொருளாளர் மனோகரன் இருவரும் தஞ்சை ரிசார்ட் ஒன்றில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருச்சி மண்டலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

நிர்வாகிகளிடம் பேசிய ராமசாமி, “ஐந்தாம் தேதி இதே தஞ்சையில் பாஜக ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். மேகதாது அணைக்கு எதிராக ,பாஜக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் செய்வது நாடகம் என்பது மக்களுக்கு தெரியும்.

மறுநாள் ஆறாம் தேதி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் டெல்லியை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். அதிமுக தொண்டர்களை யோசிக்க வைக்க வேண்டும். அதனால் மக்களை அதிகளவில் அழைத்து வரவேண்டும் அதற்காக செலவுக்கான தொகை வந்துசேரும்” என்று வந்தவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்பியுள்ளார்

ஆறாம் தேதி அமமுக நடத்தும் போராட்டம் பாஜகவுக்கு தங்கள் பலத்தை தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டமாக அமைய வேண்டும் என்பதே அமமுகவின் தஞ்சை அஜெண்டா

-வணங்காமுடி

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 31 ஜூலை 2021