மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

காவலர்களுக்கு விடுமுறை: தமிழ்நாடு அரசை பாராட்டிய விஜயகாந்த்

காவலர்களுக்கு விடுமுறை:  தமிழ்நாடு அரசை பாராட்டிய விஜயகாந்த்

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்று பாராட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி நேற்று(ஜூலை 30) தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,” காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணி காக்க ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடும் வகையிலும், வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

பணியில் ஈடுபடும் வார விடுமுறை தேவைப்படாத காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில், அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

காவலர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தவறாமல் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காவலர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் இன்று(ஜூலை 31),” தமிழக காவல்துறையின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வாரத்தில் ஒருநாள் மற்றும் பிறந்தநாள்,திருமண நாளில் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய இந்திய அரசுக்கும், அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த மாநில அரசுக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

-வினிதா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

சனி 31 ஜூலை 2021