மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

பிளஸ் 2 தேர்விலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு : முதல்வர்!

பிளஸ் 2 தேர்விலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு : முதல்வர்!

தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு துணை தேர்வுகளை தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 11ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்வின்றி ஆல்பாஸ் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதுபோன்று பத்தாம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து, தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஆனால், துணைத் தேர்வுகள் எழுதும் தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அவர்களையும் ஆல்பாஸ் என அறிவிக்கக் கோரி கோரிக்கைகள் எழுந்தபோதும்,தேர்வு நடத்தும் முடிவிலிருந்து அரசு பின்வாங்கவில்லை.

அதன்படி தனித்தேர்வர்களுக்கும், பிளஸ் 2 மதிப்பெண்ணில் திருப்தியில்லாமல் மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஹால்டிக்கெட்டுகள் இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிளஸ் 2 வகுப்பு துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 17(i)இன் அடிப்படையில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து, அவர்கள் அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று(ஜூலை 31) உத்தரவிட்டுள்ளார். இதனால் 313 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும்.

பிளஸ் 2 தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம். தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சிப் பெற்றதாக தங்களை அறிவிக்குமாறு கோர முடியாது என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

சனி 31 ஜூலை 2021