மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே முடியும்: சுகாதார செயலாளர்!

மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே முடியும்: சுகாதார செயலாளர்!

பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வர முடியும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. மாநிலத்தில் 35 ஆயிரமாக இருந்து தினசரி பாதிப்பு மே பிற்பகுதியிலிருந்து படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது தினசரி பாதிப்பு 1,947 என்ற அளவில் உள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை புதன்கிழமையை(1756) விட அதிகமானது. கடந்த நான்கு நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 215 பேர் கோவையில் 230 பேர், ஈரோட்டில் 171, தஞ்சையில் 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மாதமாக இறங்குமுகத்தில் இருந்த கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் செல்ல தொடங்கியுள்ளது சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பாதிப்பு அதிகரித்ததையடுத்து, மக்கள் அதிகமாக கூடும் 9 இடங்களில் உள்ள அங்காடிகள் இன்று முதல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிப்பு அதிகரித்துள்ள மாவட்டங்களில் பாதிப்பின் காரணத்தை கண்டறிய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை இன்று(ஜூலை 31) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செயலாளர் ராதாகிருஷ்ணன்,” கொரோனா மூன்றாவது அலை வருமா? வராதா? என்பது தெரியாவிட்டாலும், அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியும். தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு தீவிர கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அங்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதால், 25% படுக்கைகள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை தவிர மற்ற அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது. அரசே அனைத்திற்கும் அனுமதி வழங்கிவிட்டு, தற்போது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனாவிலிருந்து மீண்டுவர முடியும் என்று சொன்னால் என்ன நியாயம்? எல்லாம் திறந்திருக்கும்போது மக்கள் செல்லக் கூடாது என்று தடை விதிப்பது எப்படி? என்று சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

சனி 31 ஜூலை 2021