மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

கலைஞர் திருவுருவ படம் திறப்பு: குடியரசுத் தலைவரைச் சந்தித்த அப்பாவு!

கலைஞர் திருவுருவ படம் திறப்பு: குடியரசுத் தலைவரைச் சந்தித்த அப்பாவு!

கலைஞர் படத்திறப்பு விழா மற்றும் சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமையேற்கக் குடியரசுத் தலைவருக்குச் சபாநாயகர் அப்பாவு நேரில் அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் திரு உருவப் படம் திறப்பு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 5 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை வளாகத்தில் நடைபெறுகிறது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கலைஞரின் திருவுருவப் படத்தைத் தலைமைச் செயலகத்தில் திறந்து வைக்கவுள்ளார். இதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

சட்டமன்றத்தில் கலைஞர் உருவப் படம் திறப்பு விழா அழைப்பிதழை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் நேரில் சென்று வழங்கி விழாவுக்கு அழைத்து வருகிறார்கள்.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இதுவரை நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி விழாவுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பல தலைவர்களையும் சந்தித்து வருகிறார்கள்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 19ஆம் தேதி குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் டெல்லி சென்ற சபாநாயகர் அப்பாவு இன்று (ஜூலை 31) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலைஞர் படத்திறப்பு விழா அழைப்பிதழைக் குடியரசுத் தலைவரிடம் அப்பாவு வழங்கினார். அதோடு, 'The Dravidian Model' என்ற புத்தகத்தையும் வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “1921ல் தொடங்கப்பட்ட சட்டமன்றத்தின் 100ஆண்டு விழா மற்றும் , 13முறை தேர்தலில் போட்டியிட்டு, அனைத்திலும் வெற்றி பெற்று, அதே சட்டமன்றத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, 5 முறை முதல்வராக இருந்த கலைஞரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புக்கொண்டார். தமிழக மரபுப்படி குடியரசுத் தலைவரிடம் அழைப்பு விடுத்தேன்” என்றார்.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

சனி 31 ஜூலை 2021