மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

ஸ்டெர்லைட்: ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!

ஸ்டெர்லைட்: ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கொரோனா இரண்டாம் நிலையின் காரணமாக ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கப்பட்டது. அதாவது ஜூலை 31ஆம் தேதி வரை இந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.

இந்த அனுமதி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுத் தாக்கல் செய்தது.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், தமிழகத்தில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை நீட்டிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஆலையில் செய்யப்பட்டு வந்த உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு இரண்டு மெகாவாட் மின்சாரம் வழங்கவும், ஆக்சிஜன் உற்பத்தி பிரிவைத் தொடர்ந்து இயங்கும் நிலையில் வைத்திருக்க மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

சனி 31 ஜூலை 2021