மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

கொரோனா அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

கொரோனா அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் பாதிப்பின் காரணத்தை கண்டறிய மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் குறைந்து வந்து கொண்டிருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் 1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,109 பேர் ஆண்கள், 838 பேர் பெண்கள். 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று(ஜூலை 30) உலக கல்லீரல் அழற்சி தினத்தையொட்டி சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனை முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” தமிழ்நாட்டில் குறைந்து வந்து கொண்டிருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை, கன்னியாகுமரி,கோவை,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. பாதிப்பிற்கான காரணத்தை கண்டறிய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவதால்தான் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவுடனே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறோம். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கோவையில் மட்டுமே 13 எல்லைகளில் வாகன சோதனை மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

மக்கள் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்துவிட்டு, முகக்கவசம் அணியாமல் இருக்கக் கூடாது. இன்று கலைவாணர் அரங்கில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி இடஒதுக்கீடு நிச்சயம் பயனளிக்கும். தற்போது கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் சூழல் இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கால நீட்டிப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்று கூறினார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 31 ஜூலை 2021