மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ்!

அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ்!

தமிழக அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் கடந்த அதிமுக ஆட்சியில் நியாயமற்ற முறையில் போடப்பட்ட எந்த வழக்காக இருந்தாலும் அதை ஆய்வு செய்து வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி நேற்று பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்று (ஜூலை 30) தமிழக அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் ஈ.பி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,

அரசியல் பிரமுகர்கள் பழ.கருப்பையா மற்றும் நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், கணேசன், (புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி), திமுகவைச் சேர்ந்த கே.என். நேரு மற்றும் எஸ்.எம்.நாசர், பாராளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன். ஆர்.எஸ்.பாரதி. எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வெள்ளி 30 ஜூலை 2021