மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

இலவச பயண திட்டத்தினால் ரூ.1358 கோடி இழப்பு: அமைச்சர்!

இலவச பயண திட்டத்தினால் ரூ.1358 கோடி இழப்பு: அமைச்சர்!

தமிழ்நாட்டில் நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதன் மூலம் போக்குவரத்து துறைக்கு 1358 கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தில் இன்று(ஜூலை 30) போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 333 பேருக்கு நிதி உதவியும் 369 பயனாளிகளுக்கு ரூபாய் 46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவியும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “ராமநாதபுரத்தில் கீழக்கரை மேம்பால பணி விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சரிடம் பேசவுள்ளேன்.

நகர பேருந்துகளில் மகளிர்களுக்கான இலவச பேருந்து திட்டத்தினால் போக்குவரத்து துறைக்கு 1358 கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. இழப்பை ஈடுகட்ட அரசு ஏற்கனவே 1,200 கோடி கொடுத்துள்ளது.மீதமுள்ள தொகையும் அரசு விரைவில் வழங்கும். போக்குவரத்து துறை வெளிப்படையாக செயல்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து துறையில் 55 வயதுக்கு மேல் உள்ள உடல் தகுதியுள்ளவர்களை பேருந்து இயக்க அனுமதிக்கப்படுகிறார்கள். உடலளவில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அவர்களுக்கு தகுந்தாற்போல் வேலை மாற்றி தரப்படுகிறது. தொழிலாளர்களின் பிரச்சினை அதிகமாகவே இருக்கிறது. அதைவிட தமிழ்நாடு அரசாங்கத்தின் பிரச்சினையும் நிறைய இருக்கிறது. கொரோனா பரவல் குறைந்தவுடன் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது தொழிலாளர்களின் நலன் சார்ந்த அரசு. அதனால் தவறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை” என்று கூறினார்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வெள்ளி 30 ஜூலை 2021