மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

நீதிபதி கொலை: உச்ச நீதிமன்றம் வழக்குப்பதிவு!

நீதிபதி கொலை:  உச்ச நீதிமன்றம் வழக்குப்பதிவு!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நீதிபதி மீதுஆட்டோ ஏற்றி கொலை செய்த விவகாரம் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூலை 28ஆம் தேதி காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சியின் மூலம், நீதிபதி மீது திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்பட்ட விபத்து என உறுதி செய்யப்பட்டதையடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் லக்கன் குமார் வர்மா, அவரது கூட்டாளி ராகுல் வர்மா ஆகிய இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.

அதன்படி, மாவட்ட நீதிபதி கொலை செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இன்று(ஜூலை 30) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ”நீதித்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது பல தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இந்தியாவில் நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் விரும்புகிறது என்று தலைமை நீதிபதி கூறினார்.

மேலும், இந்த வழக்கில் ஒரு வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜார்கண்ட மாநில தலைமை செயலாளருக்கும், காவல்துறை இயக்குநருக்கும் உத்தரவிட்ட தலைமை நீதிபதி ரமணா, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தாக்குதல் குறித்து அந்தந்த மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிபதி உத்தம் ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள நீதித்துறை அதிகாரிகள் தங்களது வாட்ஸ் அப், முகநூல், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எரியும் கருப்பு மெழுகுவர்த்தி படத்தை முகப்பு படமாக வைத்துள்ளனர்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வெள்ளி 30 ஜூலை 2021