மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்கக்கூடாது: தமிழக அரசு!

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்கக்கூடாது: தமிழக அரசு!

தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை நீட்டிக்கத் தேவை இல்லை என்று தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாகத் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகமாக இருந்தது. இந்த சூழலில், தமிழக அரசால் மூடி சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவும், அதில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்குமாறும் அதன் நிறுவனமான வேதாந்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதன்படி, கடந்த மே 5ஆம் தேதி முதல் நாளை ஜூலை 31ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நாளையுடன் இந்த கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் நேற்று (ஜூலை 29) புதிய இடைக்கால மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ ஆக்சிசன் தயாரிக்க வழங்கப்பட்ட முந்தைய அனுமதியை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்த போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, "ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர், “தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்க தேவையில்லை ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயங்க அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தியைத் தொடரலாம் என்று அனுமதி வழங்கினர்.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வெள்ளி 30 ஜூலை 2021