மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஜூலை 2021

பாலியல் வழக்கு:400 பக்க குற்றப்பத்திரிகை!

பாலியல் வழக்கு:400 பக்க குற்றப்பத்திரிகை!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கம் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

2021 பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது பாதுகாப்புப் பணிக்காக வந்த சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் எஸ்பி ஒருவரைத் தனது காரில் ஏற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டதோடு சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதேசமயத்தில் இவ்விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் சிறப்பு டிஜிபி உட்பட இவ்விவகாரத்தில் தொடர்புடைய ஐந்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு சிபிசிஐடி போலீசார் பரிந்துரை செய்ததாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகளாக உள்ளதால் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு இது தொடர்பான பரிந்துரை கடிதம் தமிழக அரசின் தரப்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற, முன்னாள் சிறப்பு டிஜிபி மீது 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி இன்று (ஜூலை 29) தாக்கல் தாக்கல் செய்துள்ளார்.

-பிரியா

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வியாழன் 29 ஜூலை 2021