மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஜூலை 2021

ஐந்து மாநிலத் தேர்தல்: தயாராகும் தேர்தல் ஆணையம்!

ஐந்து மாநிலத் தேர்தல்: தயாராகும் தேர்தல் ஆணையம்!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐந்து மாநிலத் தேர்தல்கள் தொடர்பான திட்டமிடலுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறது.

கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலையில் அந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆய்வும் ஆலோசனையும் நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பின்மை ஆகியவை தேர்தல் நடத்துவதற்கு முக்கிய அடையாளங்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் இருந்தாலும் மக்களை முன்னிலைப்படுத்தி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் நிலுவையில் உள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டதோடு,

“கொரோனா தொற்று சூழலில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைகளை மாற்றியமைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அத்தியாவசிய வசதிகள் இருக்க வேண்டும்” என்றார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஐந்து மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களின் வயது விவரம், நிதி கையிருப்பு, மனிதவளம், திட்டமிடல், வாக்குச்சாவடி ஏற்பாடுகள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தங்களது மாநிலத்தில் தேர்தல் நடத்துவது பற்றிய பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக படக்காட்சிகளுடன் விளக்கம் அளித்தனர். இந்தக் கூட்டத்தில், மூத்த துணை தேர்தல் ஆணையர், துணை தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 29 ஜூலை 2021