மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்: முதல்வர்!

இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்: முதல்வர்!

தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் வகையில், பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர், "பள்ளி, கல்லூரிகளில் இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடங்குதல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளை தேவைப்படும் இடங்களில் தொடங்க வேண்டும்.

புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும், இதற்கென அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவிலான உண்மையான பலன்தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தொழிற்சாலைகளின் எதிர்கால தேவைக்கேற்றவாறு பயிற்சியாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி (Futuristic Employable Skill Training), அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் கட்டுமான திறன் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களின் மீது விரைவாக தீர்வு கண்டு பயனாளிகளுக்கான பலன்கள், நலத்திட்ட உதவிகள், குறித்த காலத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒருங்கிணைத்து அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக செல்போன் செயலியை உருவாக்க வேண்டும்.

அரசின் திறன் மேம்பாடு தொடர்புடைய திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளான விர்ச்சுவல் ரியாலிட்டி, க்ளவுட் கம்ப்யூட்டிங், 3-டி பிரிண்டிங், சைபர் செக்யூரிட்டி ஆகியவற்றில் திறன் பயிற்சிகள் வழங்க வேண்டும். தோட்டக்கலை மற்றும் விவசாயம் சார்ந்த கருவிகளின் பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.

கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையுடன் இணைந்து மகளிர், கிராமப்புற இளைஞர்களுக்கு நாட்டுக் கோழி, கறவை மாடு வளர்ப்பு குறித்து திறன் பயிற்சி வழங்க வேண்டும். மாநில அளவில் ஒருங்கிணைந்த திறன் பதிவை உருவாக்க வேண்டும்.

அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்புத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு நிறுவனங்களை இணைக்க வேண்டும்.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் அதிகமான தொழிலாளர்கள் உள்ள இடங்களில் மருத்துவமனைகள் தொடங்கப்பட வேண்டும். அனைத்து மருந்தகங்களிலும் ஆய்வக வசதிகள் உருவாக்க வேண்டும். கூடுதலாக ஆயுஷ் மருத்துவ பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.

-வினிதா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

புதன் 28 ஜூலை 2021