மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம்: அமைச்சர் உறுதி!

ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம்: அமைச்சர் உறுதி!

தமிழ்நாட்டில் வாடகை கட்டடத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் 8,000 ரேஷன் கடைகளுக்கு விரைவில் சொந்த கட்டடம் கட்டி தரப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 27) நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நிலுவையில் உள்ள 1,362 விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 1,700 மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளைப் பிரித்து புதிய ரேஷன் கடைகள் திறக்கப்படும்.

கடந்த ஆட்சியில் திறக்கப்பட்ட நடமாடும் ரேஷன் கடைகளுக்குப் பதிலாக பகுதிநேர கடைகள் தொடங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி,பகுதிநேர ரேஷன் கடைகள் தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் 8,000 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. அதற்கு சுமார் ரூ.18 கோடி வாடகை செலுத்தப்படுகிறது. இந்தக் கடைகளுக்கு விரைவில் சொந்த கட்டடம் கட்டப்படும். மாவட்ட ஆட்சியர் மாதத்துக்கு குறைந்தபட்சம் 20 ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையடுத்து, செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள ரேஷன் கடை, திம்மாவரத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கு, ஆத்தூரில் உள்ள கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சர், விவசாயிகள் 7 பேருக்கு ரூ.8 லட்சத்து 30,000 பயிர் கடனை வழங்கினார்.

-வினிதா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

புதன் 28 ஜூலை 2021