மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

பெகாசஸ் குறித்து ஏன் விவாதிக்கக் கூடாது?: ராகுல்

பெகாசஸ்  குறித்து ஏன் விவாதிக்கக் கூடாது?: ராகுல்

பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்ற அவையில் ஏன் விவாதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம். பி. கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் கொட்டும் மழையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் சிபிஐ இயக்குநர்கள் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

கடந்த ஜூலை 18ஆம் தேதி இந்த செய்திகள் வெளியான நிலையில் ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அன்று முதலே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் அலுவல் பணிகள் முடங்கியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாலும் இவ்விவகாரத்தைப் பேச ஒன்றிய அரசு மறுக்கிறது. இந்த தகவல் உண்மை அல்ல என்றும் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த நிலையில் பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடி விவாதித்தனர். ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி, சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் ஷமந்த் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பெகாசஸ் விவகாரம் குறித்து ஒன்றிய அரசு நாடாளுமன்ற சிறப்புக் குழு விசாரணைக்குச் சம்மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இதன் பின்னர் அனைத்து எம்.பி.க்களும் இன்று கொட்டும் மழையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி பேசுகையில், “ஒன்றிய அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கி இந்திய மக்களை வேவு பார்த்ததா இல்லையா என்று தான் கேட்கிறோம். அதற்கு ஆம் இல்லை என்று பதில் சொல்லலாம். ஆனால் நாடாளுமன்ற அவையில் இதைப் பற்றி விவாதிக்கவே கூடாது என்கின்றனர். இந்த விவகாரத்தை ஏன் சபையில் விவாதிக்க முடியாது?. நாங்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தொந்தரவு செய்யவில்லை. எங்களது பொறுப்பைத்தான் செய்கிறோம்.

எதிர்க்கட்சிகளின் குரல்கள் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படுகிறது. பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காயப்படுத்திவிட்டனர். பெகாசஸ் விவகாரம் என்பது "தனியுரிமைக்கான விஷயம் அல்ல", "தேச விரோத வேலை” என்று கூறினார்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 28 ஜூலை 2021