மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எப்போது? : அமைச்சர்!

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எப்போது? : அமைச்சர்!

தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று(ஜூலை 28)செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “கொரோனா காலம் முடியும்வரை கல்லூரிகளில் 75 சதவிகித கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகளில் தோல்வி அடைந்தால் தகுதி நீக்கம் செய்யப்படும் முறை நடைமுறையில் உள்ளது. அதை மாற்றம் வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளது. அவை மாற்றம் செய்யப்பட்டு பிற கல்லூரிகளில் உள்ளதுபோன்று மொத்தமாக அரியர் தேர்வுகள் எழுத வாய்ப்பளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கென ஒரு கொள்கையும், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வேறு ஒரு கொள்கையும் பின்பற்றப்பட்ட நிலைமை மாற்றப்பட்டு, அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஒரேமாதிரியான, சமமான நடைமுறை செயல்படுத்தப்படும். அதுபோன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் இருப்பதுபோல் பிற கல்லூரிகளிலும் மதிப்பீடு முறையை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.

கல்லூரிகள் திறப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கல்லூரி திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களைத் தவிர இரண்டாம் ஆண்டு, இறுதியாண்டு வரையிலான மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க கூடிய வகையில் சிம் கார்டுகள் வழங்கப்பட்டு விரைவில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும்.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு நேற்று வரை ஒற்றைச்சாளர முறையில் 41 ஆயிரத்து 363 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,26,748 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒருவர் இரண்டு, மூன்று கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். ஏற்கனவே சொன்னதுபோல், மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்” என தெரிவித்தார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 28 ஜூலை 2021