மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

விருது தொகையை கொரோனா நிதிக்கு வழங்கிய என்.சங்கரய்யா

விருது தொகையை கொரோனா நிதிக்கு வழங்கிய என்.சங்கரய்யா

தகைசால் தமிழர் விருதுக்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 27) உத்தரவிட்டிருந்தார்.

புதிய விருது உருவாக்கப்பட்ட மறுநாளே, இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் அவருக்கு வழங்கப்படும் என்று இன்று(ஜூலை 28) தமிழ்நாடு அரசு அறிவித்தது.

விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் என்.சங்கரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள 'தகைசால் தமிழர்' விருதினை இந்தாண்டு எனக்கு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எனது சேவையைப் பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக்கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூபாய் 10 லட்சம் தொகையினை கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டிவரும் முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன்.

மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்றுவரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டின் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்த அளவு பணியாற்றியுள்ளேன். சுரண்டலற்ற பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக்கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியைத் தொடர்ந்து நிறைவேற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

புதன் 28 ஜூலை 2021