மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்: அதிமுகவில் திடீர் திருப்பம்!

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்: அதிமுகவில் திடீர் திருப்பம்!

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். கடந்த ஜூலை 26, 27 நாட்களில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 28) திமுக அரசை எதிர்த்து அதிமுக நடத்தும் போராட்டத்தில் தேனி மாவட்டம் போடியில் கலந்துகொண்ட ஓ.பன்னீர் செல்வம் அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "சசிகலா அதிமுக தொண்டர்களிடம் ஆடியோவில் பேசி வருகிறார். அதிமுகவை கைப்பற்றி வருவதாக சொல்கிறார். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்கப்பட்டபோது,

"நடந்து முடிந்த அரசியல் வரலாறுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதிமுக இன்றைக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கி வழி நடத்திக் கொண்டிருக்கிறோம். தனிப்பட்ட நபரோ, குடும்பமோ ஆதிக்கம் செலுத்த முடியாத ஜனநாயக முறையை நாலரை ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தியிருக்கிறோம். எந்த நோக்கத்துக்காக அதிமுக ஆரம்பிக்கப்பட்டதோ அது இப்போது நிரூபித்துக் காட்டப்பட்டு வருகிறது. எனவே யாராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது" என்று கூறியிருக்கிறார்.

சசிகலா அதிமுகவுக்குள் மீண்டும் வருவதை ஓ.பன்னீர் செல்வம் ஆதரிக்கிறார் என்றே பலரும் கருதும் நிலையில், பன்னீரின் இன்றைய பேட்டி புதிய அரசியல் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

-வேந்தன்

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

புதன் 28 ஜூலை 2021