மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

10.5% ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

10.5% ஒதுக்கீடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்  கேள்வி!

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு அளித்து கடந்த ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பை, இந்த ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணையாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியிட்டார்.

இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்த நிலையில்.... மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் வன்னியர் தவிர பிற சாதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 28) சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள்,

"தற்போது பல வழக்குகள் இது தொடர்பாக இருக்கும் நிலையில் தமிழக அரசால் எந்த அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்"என்று முறையிட்டனர்.

இந்த நிலையில் வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இது இந்த இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

-வேந்தன்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 28 ஜூலை 2021