மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

ஓபிஎஸ்,உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

ஓபிஎஸ்,உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்செல்வனை விட11,055 வாக்குகள் அதிகம் பெற்று ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி போடி தொகுதியைச் சேர்ந்த மிலானி, என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் தனது வேட்புமனுவில் அவரது மனைவி விஜயலட்சுமி பெற்ற கடனுக்கு உத்தரவாதம் அளித்த சொத்தின் மதிப்பை குறைத்து காட்டியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுபோன்று, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 69,355 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ” உதயநிதி தனது வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும், அதனால் அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது செல்லாது எனவும் அறிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த இரண்டு வழக்குகளையும் இன்று(ஜூலை 28) நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார். ஓபிஎஸ்ஸூக்கு எதிரான வழக்கில், சொத்து மதிப்பு குறைத்து காட்டப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் மிலானிக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதுபோன்று, உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வைப்பு தொகை செலுத்தாதது குறித்து விளக்கமளிக்க மனுதாரர் எம்.எல்.ரவிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 28 ஜூலை 2021