மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஜூலை 2021

தமிழ்நாடு அரசின் புதிய விருது : முதல்வர் உத்தரவு!

தமிழ்நாடு அரசின் புதிய விருது : முதல்வர் உத்தரவு!

தமிழ்நாடு அரசின் சார்பில் ’தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று(ஜூலை 27) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைபடுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு முதல்வர் தலைமையில், தொழில்துறை தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் கொண்ட ஒரு குழு அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது, தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், பாராட்டு சான்றிதழையும் முதல்வர் வழங்குவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

செவ்வாய் 27 ஜூலை 2021