மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஜூலை 2021

மன்னிப்பு கேட்ட வீராங்கனை: பாராட்டிய ராகுல்

மன்னிப்பு கேட்ட வீராங்கனை: பாராட்டிய ராகுல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தோல்வியுற்றதால் மன்னிப்பு கேட்ட தமிழக வீராங்கனை பவானி தேவியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று (ஜூலை 26) நடைபெற்ற வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார்.

ஒலிம்பிக் போட்டியில் 1896ஆம் ஆண்டு வாள்வீச்சு அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்த ஆண்டுதான் முதன்முறையாக இந்தியாவில் இருந்து பங்கேற்றார் சென்னையைச் சேர்ந்த பவானி தேவி.

நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் முதல் போட்டியில் துனியா நாட்டை சேர்ந்த நாடியா அஸிசியை எதிர்த்து போட்டியிட்ட பவானி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் வென்ற முதல் இந்தியா வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற அவர், அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார். இரண்டாவது போட்டியில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டுடன் மோதிய பவானி, எதிர்பாராதவிதமாக 7-15 என்ற கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்தார். இது அவருக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில் தன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் வீராங்கனை பவானி தேவி ட்விட்டரில், “மிகப்பெரிய நாள். இன்று (நேற்று) உற்சாகமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் இருந்தேன். நான் முதல்போட்டியில் 15-3இல் நாடியா அஸிசிக்கு எதிராக வென்றேன். ஒலிம்பிக்கில் ஒரு போட்டியை வென்ற முதல் இந்திய ஃபென்சிங் வீராங்கனையாக ஆனேன். ஆனால், இரண்டாவது போட்டியில் உலகின் மூன்றாவது ஃபென்சிங் வீராங்கனையான மனோன் புரூனெட்டுக்கு எதிராக 7-15 என்ற கணக்கில் தோற்றேன். நான் என் நிலையைச் சிறப்பாக செய்தேன். ஆனாலும் வெல்ல முடியவில்லை.என்னை மன்னிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “உங்களது முயற்சியை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. வெற்றிக்கான பயணத்தில் இது மற்றுமொரு படியாகும்...” என்று பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், “தோல்வி குறித்து கவலைப்பட வேண்டாம். இதுதொடக்கம்தான். எதிர்காலத்தில் நிச்சயம் தங்கம் வெல்வீர்” என்று ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 27 ஜூலை 2021