மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

எடியூரப்பா விலகல் ஏன்? கர்நாடகத்தின் புதிய முதல்வர் யார்?

எடியூரப்பா விலகல் ஏன்?  கர்நாடகத்தின் புதிய முதல்வர் யார்?

நேற்று (ஜூலை 25) கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா, “கர்நாடகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. முதல்வர் எடியூரப்பா தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்”என்று குறிப்பிட்டார். ஆனால் இன்று (ஜூலை 26) கர்நாடகத்தில் பாஜகவுக்குள்ளான அரசியல் நெருக்கடி முற்றி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் எடியூரப்பா. அவரது ராஜினாமாவை ஏற்று அவரது அமைச்சரவையைக் கலைத்திருக்கிறார் ஆளுநர்.

முதல்வர் பதவியில் இருந்து வெளியேறிய பிறகு, "யாரும் என்னை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கவில்லை. இரண்டு வருட அரசாங்கம் முடிந்தபின் வேறு யாராவது முதல்வராக பதவியேற்கலாம் என்பதற்காக நான் சொந்த முடிவில்தான் ராஜினாமா செய்தேன்”என்று கூறியிருக்கிறார். ஆனால் அவரது உடல்மொழியும், குரலும் பாஜகவுக்குள் அவர் அனுபவித்த அதிகபட்ச நெருக்கடிகளை சொல்லாமல் சொல்லியது.

78 வயதான எடியூரப்பா முதல்வர் பதவியில் அமரக் கூடாது என்று ஆரம்பத்திலேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. ஆனால் ஏழு முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற தான் கர்நாடகாவில் பாஜகவின் முகமாக இருப்பதாக கூறி முதல்வர் பதவியை போராடிப் பெற்றார் எடியூரப்பா.

ஆனால் இந்த இரு வருடம் முழுதும் அவர் பல சீனியர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். பாஜக எம்.எல்.ஏ பசன கவுடா பாட்டீல், “அடுத்த தேர்தலில் யெடியூரப்பாவை முதலமைச்சராக கட்சி முன்னிறுத்தினால், பாஜகவை கர்நாடகாவில் உயிருடன் வைத்திருக்க முடியாது” என்று வெளிப்படையாக பேசினார். மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி. யோகேஸ்வரா, முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா என பலர் எடியூரப்பாவுக்கு எதிராகத் திரண்டனர்.

இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம், 24 ஏக்கர் அரசு நிலங்களை தனியார் நபர்களுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் எடியூரப்பா மீது சர்ச்சை வளையம் இறுகியது. எடியூரப்பாவின் மகன்கள் பி.ஒய் ராகவேந்திரா, பி.ஒய் விஜயேந்திரா ஆகியோர் நிர்வாகத்தில் அதிக தலையீடு செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் தலைமைக்குச் சென்றன. இந்தப் பின்னணியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் கர்நாடாகாவுக்கு ஒரு இளம் தலைவர் வேண்டுமென்று அழுத்தங்களும் தலைமைக்குச் சென்றன.

மாநிலத்தில் கொரோனாவைக் கையாள்வதிலும் எடியூரப்பா திருப்தியளிக்கும் விதத்தில் செயல்படவில்லை. கர்நாடகாவில் கொரோனாவை கையாண்டது தேசிய அளவில் பாஜகவுக்கு கெட்டபெயரை ஏற்படுத்திவிட்டது என்று பாஜக பிரமுகர்களே வெளிப்படையாக குற்றம்சாட்டினார்கள்.

இந்தப் பின்னணியில்தான் எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

எடியூரப்பாவின் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் முருகேஷ் நிரானி, பாஜக தேசிய பொதுச் செயலாளரும் தமிழகப் பொறுப்பாளருமான சி.டி. ரவி, மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, தற்போதைய ஒன்றிய அமைச்சர் ப்ரகலாத் ஜோஷி போன்றோரது பெயர்கள் அடுத்த முதல்வர் பட்டியலில் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-வேந்தன்

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

திங்கள் 26 ஜூலை 2021