மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

பெயர் வைப்பதற்காகவே ஜெ.பல்கலை திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி

பெயர் வைப்பதற்காகவே  ஜெ.பல்கலை திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி

மாணவர்கள் நலன் கருதி அல்ல, ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று(ஜூலை 26) உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தபோது, “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேவைக்கு அதிகமான பேராசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தது உண்மைதான். அவர்கள்அனைவரும் அதே கல்லூரியில் இருக்க முடியாது என்பதால், பல்வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இந்த பிரச்சினை விரைவில் தீர்த்து வைக்கப்படும்” என்றார்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் துவங்கப்பட்ட பல்கலைக்கழகம் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் திறந்துவிட்டு அதற்கு ஒரு ரூபாய் கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இருந்து நிதி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னாரே தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பல்கலையில் துணைவேந்தர், உதவியாளர், டிரைவர் மற்றும் வாட்ச்மேன் என நான்கு பேர் மட்டுமே இதுவரை பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு பல்கலைக்கழகத்தை நியமித்ததாக அர்த்தமா? அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி அல்ல; பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக அந்த பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது. அப்பகுதி மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்திருப்பது மிகப்பெரிய பெருமை சேர்க்கக் கூடிய விதமாகதான் அமையும்.

கடந்த ஆண்டுகளில் பல்வேறு விதிகள் பின்பற்றப்படவில்லை என்று பல புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த புகார்களை விசாரிப்பதற்குதான் குழுவை நியமித்து இருக்கிறோம். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் தங்கையே திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்திருக்கிறார். அவர் மீது வரப்பெற்ற புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. எங்கெல்லாம் புகார்கள் வருகிறதோ, அங்கு அதுகுறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான முடிவு எடுக்கப்படும்.

வன்னியர் இடஒதுக்கீடு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். திறந்தவெளி பல்கலைக்கழக பாடபுத்தகங்களில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து இடம் பெற்றிருந்த தவறான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, வழங்கப்பட்டுள்ளன.பழைய புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டுவிட்டன” என்று கூறினார்.

பள்ளி பாடப்புத்தகங்கள் போன்று உயர்கல்வி பாடப்புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தை இடம்பெறுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒன்றிய அரசு என்றுதான் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அதனால், தமிழ்நாட்டில் உள்ள எந்த பாடபுத்தகத்திலும் ஒன்றிய அரசு என்றுதான் இடம்பெறும். உயர் கல்வி பாடப்புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையே இருக்கும்.

கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆன்லைன் மூலமும், உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். அதற்குதான் ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரிகளில் பி.எட் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்க கூடாது. அப்படி வசூலித்தால் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இந்தாண்டு 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.

கொரோனா பரவல் குறைந்த பிறகு முதல்வருடன் ஆலோசனை நடத்தி கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.

-வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

திங்கள் 26 ஜூலை 2021