மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கைக்குப் பரிந்துரை: தமிழக அரசு!

மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கைக்குப் பரிந்துரை: தமிழக அரசு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க ஒன்றிய அரசிடம் பரிந்துரை செய்துள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிரந்தர கட்டிடம் கட்டும் வரையில் தற்காலிக இடத்தில் மருத்துவமனையைத் தொடங்கவும், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நோயாளிகள் பிரிவைத் தொடங்கவும் உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (ஜூலை 26) நீதிபதிகள் டி. எஸ். சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை எப்போது என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “எய்ம்ஸ் நிர்வாகம் முடிவின் அடிப்படையில் மதுரை எய்ம்ஸில் நடப்பாண்டு 50 மாணவர்களுக்குச் சேர்க்கையைத் தொடங்குவது தொடர்பாக ஒன்றிய அரசிடம் பரிந்துரை செய்துள்ளோம். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அருகிலிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் தற்காலிகமாக அனுமதிக்கப்படுவர். மதுரை, தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் தரப்படும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர அரசு தயாராக இருக்கிறது. ஒன்றிய அரசு இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்தால் அது செயல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடர்பாகத் தமிழக சுகாதாரத் துறைக்குப் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாகத் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு , எய்ம்ஸ் இயக்குநர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கை ஜூலை 30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

-பிரியா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

திங்கள் 26 ஜூலை 2021