மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

இரண்டு வீராங்கனைகளுக்கு அரசு வேலை: அமைச்சர் மெய்யநாதன்

இரண்டு வீராங்கனைகளுக்கு அரசு வேலை: அமைச்சர் மெய்யநாதன்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளவர்களில் தனலட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகியோருக்கு அரசு வேலை வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டு வீரர்-வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில் ”வென்று வா வீரர்களே” என்ற பாடலை இன்று(ஜூலை 26) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வென்று வா வீரர்களே என்ற வரியை முதன்மையாக கொண்ட பாடல் இறுதியாக முதல்வர் வாழ்த்துகளுடன் நிறைவு பெறுகிறது.

இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், “வென்று வா வீரர்களே என்ற பாடலை அனைத்து தமிழர்களும், ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் பகிர்ந்து இந்த ஹேஷ் டேக்கை மிகப்பெரிய அளவில் வெற்றிடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த பாடல் தயாரிப்புக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கும், இதை தயாரித்து வழங்கிய தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து முதல் முறையாக வாள்வீச்சு போட்டியில் பங்கேற்றவர் பவானி தேவி. இன்று நடந்த வாள்வீச்சு போட்டியின் முதல் சுற்றில் பவானி தேவி மிக அற்புதமாக விளையாடி வெற்றி பெற்றார். இரண்டாம் சுற்றில் உலகத்தில் மூன்றாம் தரத்திலுள்ள வீராங்கனையோடு போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார். பவானி தேவிக்கு முதல்வர் சொல்வது என்னவென்றால், தோல்வி குறித்து கவலைப்பட வேண்டாம். இதுதொடக்கம்தான். எதிர்வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் அவர் தங்கம் வெல்வார். அதற்கு முதல்வரும்,அரசும் துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதுபோன்று சரத்கமல் டேபிள் டென்னிஸில் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். சத்தியன்,நேத்ரா குமணன் போன்றோர்களும் சிறப்பாக விளையாடி தகுதி சுற்றில் தோல்வி அடைந்துள்ளனர். இன்னும் நடைபெறவுள்ள போட்டிகளில் தமிழக வீரர்-வீராங்கனைகள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் மண்டலங்களில், ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்படும். அங்கு விளையாட்டில் ஆர்வமுள்ள 6 முதல் 16 வயதுள்ளவர்களை கண்டறிந்து உலகதரம் வாய்ந்த பயிற்சி அளித்து ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்வதே தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமாகும். வெளிநாட்டிற்கு சென்றோ அல்லது வெளிநாட்டில் இருந்து பயிற்சியாளர்களை இங்கு வரவழைத்தோ பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஒலிம்பிக் போட்டியில், தமிழ்நாட்டில் இருந்து குறைந்தபட்சம் 25 பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே நமது இலக்கு.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில், 9 பேர் அரசு மற்றும் தனியார் துறையில் வேலையில் உள்ளனர். வறுமைக் கோட்டிற்குக்கு கீழே உள்ள சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தாயகம் திரும்பியவுடன் அவர்களுக்கு அரசு பணி ஆணையை தமிழ்நாடு முதல்வர் வழங்குவார்” என்று தெரிவித்தார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 26 ஜூலை 2021