மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

துரைமுருகன், விஜயபாஸ்கர்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

துரைமுருகன், விஜயபாஸ்கர்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், “வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருட்கள் பணம் ஆகியவற்றை விநியோகித்து அதன் மூலம் விஜயபாஸ்கர் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். மேலும் அதில் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக விஜயபாஸ்கர் செலவு செய்ததாகவும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் வெற்றியை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக வேட்பாளர் வி.ராமு தாக்கல் செய்த மனுவில், தேர்தல் நடைமுறைகள் உரியமுறையில் பின்பற்றப்படவில்லை. தபால் வாக்குகளையும் மின்னணு வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

எம்எல்ஏ ஜெயக்குமார்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு தாக்கல் செய்த மனுவில், மின்னணு வாக்குப்பதிவில் குறைபாடு இருந்ததாகவும் அவற்றை நிவர்த்தி செய்யாமல் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடி நடந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குகள் குறித்து அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

திங்கள் 26 ஜூலை 2021