மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

பொதுத்தேர்வுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படுமா?: அமைச்சர் விளக்கம்!

பொதுத்தேர்வுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படுமா?: அமைச்சர் விளக்கம்!

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. நேரடி வகுப்புகளை நடத்தி வந்த ஆசிரியர்கள், புதிதாக கணினி வழியில் கற்பிக்கின்றனர். அவர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காக பள்ளி கல்வித் துறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

அதன்படி, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி செயல்பாடுகளுக்கான புரிதல், ஆன்லைன், ஆன்லைனில் கற்பித்தல், இணையம் மூலம் தேவையான தகவல்களையும் வசதிகளையும் பெறுதல், வீடியோக்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்துவது உள்ளிட்ட இணையவழி அடிப்படை பயிற்சி வகுப்பை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(ஜூலை 26) தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கொரோனா காலத்தில் அனைத்துமே புதுமையாகதான் இருக்கிறது. பள்ளிகள் திறந்தால்தான் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும் என்று இல்லாமல், நம்மிடம் இருக்கின்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். அதனால்தான், ஆசிரியர்களுக்கு இணையவழி அடிப்படை பயிற்சி வகுப்பை தொடங்கியிருக்கிறோம். இப்பயிற்சி ஐந்து நாட்களுக்கு நடத்தப்படும்.

மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க கல்வி தொலைக்காட்சி ஒன்றுதான் இருக்கிறது என்பதை நீண்ட நாட்களுக்கு நாம் சொல்லி கொண்டிருக்க முடியாது. அதை தவிர்த்து வேறு சில வழிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளேன். அப்போது, இதுதொடர்பாக ஆலோசிக்கப்படும்.

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி படித்தால் மட்டுமே முதலாம் வகுப்பில் சேர்க்க முடியும், அப்படி முடிக்காதவர்களுக்கு முதலாம் வகுப்பில் அட்மிஷன் தருவதில்லை என்று கூறுகிறீர்கள். அப்படி செய்யக் கூடாது, அதுபோன்று எந்தவொரு விதிமுறையும் கிடையாது, அதுகுறித்து விசாரித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கல்வியாண்டில் 75,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். மொத்தமாக 2.04 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர்” என்று கூறினார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 26 ஜூலை 2021