மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ட்ராக்டர் ஓட்டி வந்த ராகுல்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ட்ராக்டர் ஓட்டி வந்த  ராகுல்

ஒன்றிய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று ட்ராக்டர் ஓட்டி நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 8 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்குத் தீர்வு காணும் வகையில் ஒன்றிய அரசு விவசாயிகளுடன் 12 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 3 வேளாண் சட்டங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் தான் இயற்றப்பட்டது என்று கூறுகிறார் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்தார். ராகுல் காந்தியுடன் டிராக்டரில் காங்கிரஸ் எம்.பிக்கள் பலர் ஊர்வலமாக வந்து ஒன்றிய அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ”நான் விவசாயிகளின் சார்பில் அவர்களின் கருத்துகளை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். விவசாயிகளின் குரல்களை ஒன்றிய அரசு ஒடுக்குகிறது. நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதம் நடத்த விடுவதில்லை. இந்த கருப்புச் சட்டம் 2-3 தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த நாடே அறியும்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களை (ஒன்றிய அரசு) பொறுத்தவரை வெளியில் போராடும் விவசாயிகள் தீவிரவாதிகள். உண்மையில், விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன” என்று கூறினார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

திங்கள் 26 ஜூலை 2021