மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

பெகாசஸ் எதிரொலி: அரசு ஊழியர்கள் லேண்ட்லைனைப் பயன்படுத்த அறிவுரை!

பெகாசஸ் எதிரொலி: அரசு ஊழியர்கள் லேண்ட்லைனைப் பயன்படுத்த அறிவுரை!

பெகாசஸ் விவகாரத்தின் எதிரொலியாக, அரசு ஊழியர்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் உலகத் தலைவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிர அரசின் பொது நிர்வாகத்துறை, அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் செல்போன்கள் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று (ஜூலை 24) வெளியிட்டுள்ளது.

அதில், "மகாராஷ்டிர அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அலுவலகங்களில் அலுவல் பணிக்கு செல்போனுக்குப் பதில் லேண்ட்லைனை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.

செல்போனில் பேசும்போது மிகவும் கனிவான குரலிலும், மற்றவர்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரியாத வகையில், கவனத்துடனும் பேச வேண்டும். செல்போனில் வாக்குவாதம் செய்வதோ, சத்தமிட்டு பேசுவதோ, நாகரிக குறைவாகவோ பேசக் கூடாது.

அலுவலக நேரத்தில் செல்போன் மூலம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். தனிப்பட்ட அழைப்புகளை அலுவலகத்துக்கு வெளியே சென்று பேசி வர வேண்டும்.

எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு உடனடியாகப் பதில் அளிக்க வேண்டும்.

அலுவலக ரீதியான கூட்டத்தின்போதும், உயரதிகாரிகளைச் சந்திக்கும்போதும், செல்போனை சைலன்ட்டில் போட வேண்டும்.

இதை அனைத்து ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும். மாநில அரசின் நற்பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

ஞாயிறு 25 ஜூலை 2021