மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

தடுப்பூசிகள் எங்கே?: ராகுல் காந்தி கேள்வி!

தடுப்பூசிகள் எங்கே?: ராகுல் காந்தி கேள்வி!

நாட்டில் தடுப்பூசி பணியை முடிக்க கால நிர்ணயம் செய்யவில்லை என்று ஒன்றிய அரசே ஒப்புக்கொள்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி முக்கிய ஆயுதமாக உள்ளது. அதனால், நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவதன் மூலமே எதிர்வரும் அலைகளை சமாளிக்க முடியும் என்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் எப்போது முடிவடையும்? என மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பவார், தொற்றுநோயின் மாறும் மற்றும் வளர்ந்து வரும் தன்மையை கருத்தில் கொண்டு தடுப்பூசி பணியை முடிக்க, இப்போது ஒரு நிலையான காலக்கெடுவை குறிப்பிட முடியாது. ஆனால் தகுதி வாய்ந்த அனைவருக்கும் இந்தாண்டு டிசம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி போடப்படும்” என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்திலிருந்தே , ஒன்றிய அரசு அதனை கையாளும் விதம், தடுப்பூசி கொள்கை உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் சொன்ன பதிலை சுட்டிக்காட்டி நேற்று(ஜூலை 24) ராகுல் காந்தி ட்விட்டரில், “மக்கள் உயிரை காப்பாற்ற தடுப்பூசிக்காக வரிசையில் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்க கால நிர்ணயம் செய்யவில்லை என்று ஒன்றிய அரசே ஒப்புக் கொள்கிறது. முதுகெலும்பு இல்லாத பழங்கதை. தடுப்பூசிகள் எங்கே?” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில், ‘தடுப்பூசி தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் மூலம் ஒன்றிய அரசின் பொய் வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 25 ஜூலை 2021