மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

பன்னீர் பின்னால் எடப்பாடியும் டெல்லி பயணம்!

பன்னீர் பின்னால் எடப்பாடியும் டெல்லி பயணம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 25) காலை டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில்... அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்கிறார்.

அதிமுகவில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் அலை பேசியில் பேசிய சசிகலா, " நான் விரைவில் வந்து கட்சியை சரி செய்வேன். தொண்டர்கள் என்னோடு தான் இருக்கிறார்கள்" என்று தொடர்ந்து கூறி வந்தார்.

இந்த நிலையில் அதன் அடுத்த கட்டமாக தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி அளித்த சசிகலா பன்னீர்செல்வத்துக்கும் பழனி சாமிக்கும் இடையே ஒற்றுமை இல்லை. ‌ ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பழனிசாமி ஆதரவாளர்கள் என்ற நிலை இருக்கிறது. அதிமுகவுக்கு இப்போதைய தேவை ஒற்றை தலைமை. அதை தன்னால் தான் கொடுக்க முடியும் "என்று வெளிப்படையாக பேட்டி அளித்தார் சசிகலா.

மேலும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்றும் அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொண்டு ஒருங்கிணைந்த வலிமையான அதிமுகவை உருவாக்கலாம் என பன்னீர்செல்வம் திட்டமிட்ட நிலையில் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே சசிகலா, தினகரனை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் கோரிக்கை விடுக்க எடப்பாடி நிராகரித்தார்.

இந்த நிலையில்தான் இன்று காலை சசிகலா விவகாரம் பற்றி பாஜக டெல்லி தலைமையிடம் விவாதிப்பதற்காக பன்னீர்செல்வம் அவசரமாக புறப்பட்டு சென்றதாக கூறப்பட்டது. அவர் டெல்லி சென்ற பிறகு பாஜக தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலை எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு செல்கிறார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முன்னாள் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வேந்தன்

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

ஞாயிறு 25 ஜூலை 2021